தற்போது இச்சிறுமி இந்தியாவில் சிகிச்சை பெற்று வருவதோடு, குறித்த புற்றுநோயைப் பூரணமாகக் குணப்படுத்த சுமார் 33 இலட்சங்கள் தேவைப்படுவதாக வைத்திய அறிக்கைகள் கூறுகின்றன. ஏற்கனவே விபத்தொன்றில் தந்தையை இழந்து, வலது குறைந்த ஒரு தனயனையும் பராமரிக்கின்ற நிலையில் பெரும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இக்குடும்பம் தமது பெரும்பாலான சொத்துக்களை விற்று சேர்த்த பணங்களையும், முகநூலினூடாகவும், ஏனைய உள்ளூர், வௌியூர் சகோதரர்களின் உதவிகளூடாகவும் சேர்த்த பணங்களையும் சேர்த்து நான்கு முறை இந்தியாவுக்குச் சென்று வைத்தியம் செய்தே இந்நிலை வரை முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், மீண்டும் வைத்தியர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எஞ்சியுள்ள நோயின் தாக்கங்களைக் குணப்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் குடும்பத்தினர் என்னை சந்தித்து மீண்டும் இது தொடர்பில் முகநூலில் பதியுமாறு உருக்கமாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, முகநூலிலிருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலும் இந்தப் பதிவை பதிய முன்வந்தேன்.
உங்களால் முடிந்த உதவிகளை இச்சிறுமிக்கு வழங்கி உங்கள் மறுமை வெற்றிக்கான நன்மைகளைக் கொள்ளைடித்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். நிதியுதவிகள் செய்யமுடியாதவர்கள் உங்கள் துஆக்களில் இப்பிள்ளையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பதிவின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து வைத்திய சான்றிதழ்களையும், மஸ்ஜித் நிர்வாக சான்றிதழ்களையும் இங்கு இணைத்துள்ளேன்.
(இச்சிறுமியோடு சிறுமியின் தாயும் தற்போது இந்தியாவில் இருப்பதால் உங்கள் உதவிகளை இச்சிறுமியின் மூத்த சகோதரனைத் தொடர்பு கொண்டு வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். அவருடைய தொலைபேசி இலக்கம் இதுதான்.
(பர்ஷாத் - 077-4639561- வட்ஸ்அப் நம்பரும் இதுதான்.). அல்லது பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யலாம்.
H.M. Farshad ( Hussain Mohamed Farshad )
A/C No - 100253873941 (Sampath Bank)
A/C No - 100253873941 (Sampath Bank)
( மேலதிக தகவலுக்காக கடந்த பதிவின் லின்க்கை இங்கு தருகின்றேன். https://www.facebook.com/mohamed.k.rasmy/posts/10206911186197917 )
see more.....
No comments:
Post a Comment